வெற்றியின் எண்ணங்கள்
எண்ணங்களின் வலிமை
நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது.எண்ணங்கள்தான் பொருட்களாக பரிணமிக்கின்றன.பல பெரிய கண்டுபிடிப்புகள் ஒரு எண்ணத்தின் வெளிப்பாடே..
எண்ணங்களை கையாளுதல்
ஒரு நாளில் 60000 முதல் 70000 எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது.இதில் எந்த எண்ணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதன்படிதான் நமது வழக்கை அமையும்.நமது எண்ணம் எங்கே செலுத்தப்படுகிறதோ அங்குதான் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது.
எதிர்மறை எண்ணங்களை எதிர் கொள்வது
எதிர்மறை எண்ணங்கள் வராத மனிதர்களே இந்த பிரபஞ்சத்தில் கிடையாது.எதிர்மறை எண்ணங்கள் வருவது இயல்புதான் அனால் அதிலிருந்து நம்மை எவ்வளவு சீக்கிரம் நம்மை விடுவித்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.அதிலேயே இருந்துவிட்டால் வெற்றி நம் கையருகில் இருந்தாலும் நம்மால் தொட முடியாது.
ஆழ்மன நம்பிக்கைகள்
நமது ஆழ்மனதில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் நமது எண்ணங்கள் செயலாக்கம் பெறுகின்றது அல்லது வெளிப்படுகிறது.இந்த ஆழ்மனதில் உள்ள தவறான அல்லது எதிர்மறையான நம்பிக்கைகளை சில தொடர் பயிற்சிகள் மூலம் நாம் மாற்ற முடியும்.
மனதின் சக்தி
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை மனதின் அளப்பரிய சக்திகள் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ,ஆனால் அது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.இந்த பிரபஞ்சம் நாம் கேட்டதை கொடுக்கும் என்று ஈர்ப்பு விதிகள் சொல்லுகின்றன, ஆனால் நமது உடலின் உள்ளேயே மனம் என்ற மிக பெரிய பிரபஞ்சம் உள்ளது.இருக்கிறது..
வெற்றி இலக்குகள்
நம் இலக்குகளை சரியான முறையில் நிர்ணயத்தாலே பாதி வெற்றியை காண முடியும்.சரியான இலக்குகள் இல்லையென்றால் கண்ணெதிரே உள்ள வெற்றி கானல் நீராகவே போய்விடும்..
இலக்கு
80 % Mind St 20% Work
எண்ணம் போல் வாழ்வு என்று நம முன்னோர்கள் கூறியுள்ளனர்.இந்த ஒரு நாள் பயிற்சி நிச்சயம் உங்களை வளைவின் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் ஆனால் உங்கள் பங்களிப்புதான் மிக முக்கியம். ஒரு இலக்கை அடைய வேண்டுமானால் 80% விகிதம் மனநிலையும் 20% நீங்கள் செய்யும் செயலும் இருக்க வேண்டும். இந்த பயிற்சிகள் மேம்போக்காக சொல்லப்பட்டவை அல்ல.ஒரு மனிதனின் தோல்வி என்பது அவனது அறியாமையினால்தான் தொடங்குகிறது.இந்த ஒரு நாள் பயிற்சி நிச்சயம் உங்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கும்.
வெற்றியின் எண்ணங்கள்
நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் முன் பதிவு
நாள்
11-Dec-2021
நேரம்
10:00 AM - 06:00 PM
குறிப்பு
தேனீர் மற்றும் மதியம் உணவு வழங்கப்படும் .முன் பதிவு செய்தால் மட்டுமே மதியம் உணவு ஏற்பாடு செய்யப்படும்.
இடம்
THE FORTUNE GROUP Address: 7th East Main Rd, Suthanthira Ponvizha Nagar, Gandhi Nagar, Katpadi, Vellore, Tamil Nadu 632006